பட்டுக்கோட்டை வனச்சரக பகுதியில் பறவைகள் கணக்கெடுப்பு
பறவைகள் கணக்கெடுப்பு பணியில் வனத்துறை அலுவலர்கள் தன்னார்வலர்கள் ஈடுபட்டனர்
Update: 2024-03-03 13:49 GMT
தஞ்சாவூர் வனக்கோட்டம் பட்டுக்கோட்டை வனச்சரகம் ஆவணம் பீட் மற்றும் ஓரத்தநாடு பீட்டிற்குட்பட்ட எட்டிவயல், பள்ளத்தூர் கண்ணுடையங்குளம், அதம்பை ஏரி, குறிச்சி ஏரி, இடையாத்தி பெரியகுளம், மற்றும் அருமத்தேரி ஆகிய இடங்களில் தஞ்சாவூர் மாவட்ட வன அலுவலர் அகில் தம்பி உத்தரவின்படி நிலப்பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலர் ஏ.எஸ்.சந்திரசேகரன் தலைமையில் வனவர் பி.சிவசங்கர், வனக்காப்பாளர்கள் ஏ.சபரிநாதன், மணவாளன், ராஜேந்திரன், பட்டுக்கோட்டை வனச்சரக அலுவலக பணியாளர்கள், ஓம்கார் பவுண்டேஷன் அன்பு, அகிலன், தன்னார்வலர்கள் சதீஷ், ஆதவன், மாணவர்கள் என 18 க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். செம்போத்து, ஆற்று ஆலா, பனங்காட்டு, சாம்பல் கதிர்குருவி உள்ளிட்ட பறவைகள் நடமாட்டம் கண்டறியப்பட்டது. வெளிநாட்டு பறவைகள் வலசை அதிகம் உள்ளதா என்ற நோக்கில் இதுபோல் ஆண்டுக்கு ஒரு முறை, வனத்துறை சார்பில் கணக்கெடுப்பு நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.