கொடைக்கானல் வனக்கோட்டத்தில் பறவைகள் கணக்கெடுப்பு பணி

கொடைக்கானலில் நடைபெற்ற இரண்டுநாள் பறவைகள் கணக்கெடுப்பு பணி நிறைவு.

Update: 2024-03-03 15:24 GMT

பறவைகள் கணக்கெடுப்பு பணி

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட மன்னவனூர், பூம்பாறை, தேவதானப்பட்டி, பழனி உள்ளிட்ட இடங்களில் கடந்த 2 நாட்களாக 25 இடங்களில் நடைபெற்ற கணகெடுப்பு பணி இன்று மாலையுடன் நிறைவு பெற்றது. இந்த கணகெடுப்பில் 140 வகையான பறவை இனங்களும்,10,000க்கும் மேற்பட்ட பறவைகளும் நேரடியாக பார்த்து கணக்கெடுப்பு பணி நிறைவு பெற்றதாக வனத்துறை தெரிவித்துள்ளது. இந்த கணகெடுப்பில் மும்மை, டெல்லி, கேரளா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதியில் இருந்து 33 வல்லுனர்கள்,கொடைக்கானலை சேர்ந்த இளம் இயற்கை ஆர்வலர்கள், வனப்பணியாளர்கள் இணைந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த கணகெடுப்பில் ஈடுபட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News