பறவைகள் கணகெடுப்பு பணி தீவிரம்
கொடைக்கானல் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட 25 இடங்களில் பறவைகள் கணக்கெடுப்பு குறித்த பணி தீவிரமாக நடக்கிறது.
இன்று தமிழகம் முழுவதும் பறவைகள் கணகெடுப்பு பணியானது துவங்கியுள்ளது, இதில் ஒரு பகுதியாக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட கொடைக்கானல், தேவதானப்பட்டி, பழனி, மன்னவனூர்,பூம்பாறை உள்ளிட்ட வனச்சரகங்களில் பறவைகள் கணக்கெடுப்பு பணி இன்று துவங்கியது,இந்த பணியானது இன்றும் நாளையும் நடைபெறுகிறது,
இந்த பறவைகள் கணக்கெடுப்பு பணிக்காக மும்பை,டில்லி,கேரளா,பாண்டிச்சேரி, மத்திய பிரதேசம் உள்ளிட்ட வெளிமாநிலங்களிலிருந்து 30க்கும் மேற்பட்ட வல்லுநர்கள் வருகை புரிந்துள்ளனர், இவர்களுடன் கொடைக்கானலில் பயிலும் உள்ளூர் மாணவ,மாணவியர்கள் சுமார் 30க்கும் மேற்பட்டோர் மற்றும் வனப்பணியாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் இணைந்து 25 குழுக்களாக பிரிந்து பறவைகள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்,
இந்த பணியானது நாளை மாலை முடிவடைந்த பின் பறவைகள் குறித்து சேகரித்த கணக்கெடுப்பு எண்ணிக்கையும் தெரிவிக்கப்படும் என வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, குறிப்பாக கரடிச்சோலை,ரெட் ராக்,பாம்பே சோலா,புலிச்சோலை, வட்டக்கானல் உள்ளிட்ட வனப்பகுதிகளில் பறவைகள் கணகெடுப்பு பணி நடைபெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.