காங்கிரஸ் நிர்வாகி மீது பாஜகவினர் தாக்குதல்

மகாலட்சுமி திட்டத்திற்கான உத்தரவாத அட்டை பதிவு செய்த விவகாரத்தில் காங்கிரஸ் மற்றும் பாஜகவினரிடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் துக்க வீட்டிற்கு சென்று விட்டு திரும்பிய காங்கிரஸ் நிர்வாகியின் காரை வழிமறித்து பாஜகவினர் தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2024-04-15 06:02 GMT

விருதுநகர் தந்திமரத் தெருவில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள மகாலட்சுமி திட்டத்திற்கான உத்தரவாத அட்டை பதிவு செய்த காங்கிரஸ் கட்சி நிர்வாகியை தேர்தல் பறக்கும் படையினர் பிடித்ததை அடுத்து அவர் மீது பாஜக செய்தி தொடர்பாளர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தினர். இதை அறிந்த காங்கிரஸ் கட்சியினர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் குவிந்தனர். காங்கிரஸ் கட்சியினர் குவிந்ததை அடுத்து அங்கு பாஜகவைச் சேர்ந்த மேலும் 50-பேர் வந்ததால் பாஜக காங்கிரஸ் கட்சியினர் விருதுநகர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் திரண்டனர். இதனால் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் நிர்வாகி காமராஜர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் மற்றும் மாவட்டத் தலைவர் பாண்டுரங்கன் ஆகியோர் தேர்தல் அலுவலரிடம் புகார் அளித்தனர். அதற்கு போட்டியாக பாஜகவினர் மீது காங்கிரஸ் கட்சியினர் புகார் மனு அளித்தனர். இதனால் சிறிது நேரம் இரு கட்சியினர்களிடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதன் பின்னர் காங்கிரஸ் தரப்பில் கொடுக்கப்பட்ட மனுவை தேர்தல் அதிகாரி வாங்கிக்கொண்டார். தேர்தல் அதிகாரி உயர் அதிகாரிகளிடம் பேசிவிட்டு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். அதனை தொடர்ந்து பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் மற்றும் பாஜகவினர் வருவாய்த்துறை அலுவலகத்தின் வெளியே அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதற்கு எதிர்வினையாக காங்கிரஸ் கட்சியினரும் போட்டியாக தரையில் அமர்ந்தும் படுத்தும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததன் பேரில் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் வட்டாட்சியர் அலுவலகத்தை விட்டு வெளியே செல்லும்போது அவ்வழியாக வந்த விருதுநகர் காங்கிரஸ் நிர்வாகி எட்வர்ட் மற்றும் அவரது சகோதரி மற்றும் உறவினர் உடன் சாத்தூரில் நிகழ்ந்த துக்க வீட்டிற்கு சென்று விட்டு வந்த கார் அவரது காரை வழிமறித்து நின்றதால் பாஜகவினர் அவரது காரை சூழ்ந்து கொண்டு அவரை சரமாரியாக தாக்கினர்.

இதனால் பகுதி போர்க்களம் போல காட்சியளித்தது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட பாஜகவினரை தடுத்து நிறுத்தி காரில் வந்த அவரை மீட்டு வழி அனுப்பி வைத்தனர். மேலும் காங்கிரஸ் உறுதிமொழி பத்திரத்தில் பதிவு செய்த காங்கிரஸ் நிர்வாகி காமராஜர் மீது தேர்தல் பறக்கும் படையினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் விருதுநகர் அரசியல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News