பாஜக முகாம் அலுவலகம் திறப்பு

நீலகிரி மாவட்டம், கூடலூரில் பாஜக முகாம் அலுவலகத்தை வேட்பாளர் எல். முருகன் திறந்து வைத்தார்.;

Update: 2024-03-30 04:36 GMT
பாஜக முகாம் அலுவலகம் திறப்பு

பாஜக முகாம் அலுவலகம் திறப்பு

  • whatsapp icon
நீலகிரி நாடாளுமன்ற தொகுதி பா.ஜ.க.. வேட்பாளர் எல்.முருகன் கூடலூர் சட்டமன்ற தொகுதியில் முகாம் அலுவலகத்தை இன்று திறந்து வைத்தார். ஊட்டியில் நேற்று நீலகிரி நாடாளுமன்ற தொகுதி, தேசிய ஜனநாயகக் கூட்டணி செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. இதில் பாஜக தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனன், மத்திய இணை அமைச்சர் மற்றும் பா.ஜ.க., வேட்பாளர் எல்.முருகன் உட்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக ஊட்டியில் இருந்து கூடலூருக்கு செல்லும் போது அவருக்கு மசினகுடியில் பாஜக சார்பில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. தொடர்ந்து கூடலூரில் உள்ள நாகராஜர் கோவிலில் பரிவட்டம் கட்டி வழிபாடு நடத்தினார். அதையடுத்து நீலகிரி மாவட்டம் கூடலூரில் முகாம் அலுவலகத்தை வேட்பாளர் எல்.முருகன் இன்று காலை திறந்து வைத்தார்.
Tags:    

Similar News