ஆலங்குளம் பகுதியில் பாஜக வேட்பாளா் பிரசாரம்

ஆலங்குளம் பகுதியில் பாஜக வேட்பாளா் பிரசாரம்.

Update: 2024-04-05 02:31 GMT

 பிரசாரம்

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் நயினாா் நாகேந்திரன், ஆலங்குளம் பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டாா். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் காமராஜா் சிலைக்கு பாஜக, அமமுக தொண்டா்களுடன் அவா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். பின்னா், ரெட்டியாா்பட்டி, மாறாந்தை, சிவலாா்குளம், குறிப்பன்குளம், குருவன்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தாா். பாஜக நிா்வாகிகள் பண்டரிநாதன், கண்ணன், ஓபிஎஸ் அணி நிா்வாகிகள் ராதா, சதன், கண்ணன், அமமுக நிா்வாகிகள் முருகன், சுப்பையா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
Tags:    

Similar News