மூன்று மாநில தேர்தல் வெற்றி பெற்ற பாஜக - ராசிபுரம் பாஜவினர் கொண்டாட்டம்

பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்

Update: 2023-12-04 07:13 GMT

பாஜகவினர் வெற்றிகொண்டாட்டம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நான்கு மாநில தேர்தல் முடிவுகளில் பாரதிய ஜனதா கட்சியானது மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஷ்கர் ஆகிய 3 மாநிலங்களில் மாபெரும் வெற்றி பெற்றதை முன்னிட்டு இராசிபுரம் பாரதிய ஜனதா கட்சி சார்பாக நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் புதிய பேருந்து நிலையம் அருகில் பாஜக மாநிலத் துணைத் தலைவர் சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளர் டாக்டர் கே.பி.ராமலிங்கம், அவர்கள் உத்தரவின் பெயரில் பாஜக ராசிபுரம் நகர தலைவர் பி.வேலு, அவர்கள் தலைமையில் நிர்வாகிகள், தொண்டர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி உற்சாகமாக கொண்டாடினர். மேலும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள், மற்றும் பேருந்து பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி பாஜக வெற்றி பெற்றதை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். இதே போல் நகர பாஜக சார்பில் பி.வேலு, தலைமையில் பல்வேறு இடங்களில் நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News