மோடி படம் வைக்க பாஜக கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

கடையநல்லூர் நகராட்சியில் பிரதமர் மோடியின் படத்தை வைக்க கோரி பாஜக கவுன்சிலர்கள் ஊர்வலமாக வந்து அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தனர்.

Update: 2024-03-13 06:17 GMT
பாஜக கவுன்சிலர்கள் 
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் நகராட்சியில் ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த பிரதமர் மோடியின் புகைப்படத்தை மீண்டும் வைக்க கோரி பாரதிய ஜனதா கட்சியின் நகராட்சி கவுன்சிலர்கள் பாரத பிரதமர் மோடி படத்துடன் ஊர்வலமாக வந்தனர். இதனால் கடையநல்லூர் பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது ஆனால் நகராட்சி அலுவலகத்தில் உயர் அதிகாரிகள் இல்லை. ஆகவே அடுத்த கட்ட அதிகாரிகளிடம் மோடி படத்தை வைக்க வலியுறுத்தினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News