பாஜக நிர்வாகியின் கணவருக்கு அரிவாள் வெட்டு - தாக்குதல் காட்சிகள் வைரல்

பாஜக நிர்வாகியின் கணவர் வெட்டப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் கத்தியோடு ஓடக்கூடிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Update: 2024-06-15 04:40 GMT

பைல் படம் 

சென்னை அண்ணா நகரில் பாஜகவின் மாநில மகளிர் அணி நிர்வாகியான நதியா இவருடைய கணவர் சீனிவாசன் வழக்கறிஞராக உள்ளார். அண்ணா நகரில் நண்பரை சந்திக்க வரும் பொழுது நான்கு பேர் கொண்ட மர்ம நபர்கள் சீனிவாசனை சரமாரியாக கத்தியால் வெட்டி விட்டு தப்பி ஓடினர். அருகில் இருந்தவர்கள் கொடுத்த தகவலின் பெயரில் திருமங்கலம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சீனிவாசனை மீட்டு திருமங்கலத்தில் உள்ள  தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.

சீனிவாசன் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார் இந்த நிலையில் சம்பவம் நடந்த இடத்தில் குற்றவாளிகள் சீனிவாசனை வெட்டிவிட்டு தப்பி செல்லக்கூடிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் சம்பவ இடத்திற்கு இணை ஆணையர் விஜயகுமார் நேரில் வந்து பார்வையிட்டு சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டார். நிலம் சம்பந்தமாக இந்த சம்பவம் அரங்கேறியதா அல்லது வேறு ஏதேனும் முன் விரோதமா என்ற கோணத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News