மல்லசமுத்திரத்தில் பாஜக நிர்வாகிகள் திமுகவில் ஐக்கியம்
மல்லசமுத்திரத்தில் பாஜக நிர்வாகிகள் திமுகவில் ஐக்கியம் அடைந்தனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-04-08 14:16 GMT
திமுகவில் இணைந்த பாஜகவினர்
மல்லசமுத்திரம் ஒன்றியம் மேல்முகம் ஊராட்சி , பாரதிய ஜனதா கட்சி சார்ந்த ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் குமரேசன், ஞானசுந்தரி உட்பட 150 பேர் தங்களை இன்று மாவட்ட கழக செயலாளர் எஸ்.எம். மதுரா செந்தில் அவர்கள் முன்னிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர்.
நிகழ்வில் ஒன்றிய கழக செயலாளர் பழனிவேல் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் மல்லை ஜெகதீஷ் குமார், விவசாய அணி துணை அமைப்பாளர் கணேசன், திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்