தோல்வி பயத்தால் பாஜகவினர் கோவையை சுற்றி வருகிறார்கள்: அமைச்சர்

தோல்வி பயத்தால் பாஜகவினர் கோவையை சுற்றி வருகிறார்கள் என அமைச்சர் முத்துசாமி விமர்சனம் செய்துள்ளார்.;

Update: 2024-03-22 10:52 GMT

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் 

கோவை காளப்பட்டி பகுதியில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் டிஆர்பி ராஜா,முத்துசாமி மற்றும் கூட்டணி கட்சியினர் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் முத்துசாமி, “கோவை தொகுதியை விட்டு தந்த கூட்டணி கட்சிக்கு நன்றியை தெரிவித்தவர்,

கோவை ஒரு முக்கியமான தொகுதி எனவும் இங்கு மாபெரும் வெற்றி பெற வேண்டும் என்றார்.வீடு வீடாக மக்களை சந்திப்பது தான் வெற்றியை தேடி தரும் எனவும் கோவைக்கு செந்தில் பாலாஜி நிறைய பணிகளை செய்துள்ளார்.

Advertisement

என்றவர் இன்றும் அவர் கோவையை பற்றி யோசித்து கொண்டிருப்பதாகவும் கோவையில் வேறு யாரும் நுழைந்து விடக்கூடாது என்றார்.உங்களை மீறி பாராளுமன்றத்தில் அண்ணாமலை எதுவும் செய்துவிட முடியாது எனவும் பயம் இருப்பதால் தான் பாஜகவினர் கோவையை சுற்றி வருகிறார்கள் என்றவர்,

அவர்கள் ஆயிரம் கூட்டம் நடத்தினாலும் 40 தொகுதிகளிலும் நாம் தான் இங்கு வெற்றி பெறுவோம் என்ற அவர் மத்தியில் நமது கூட்டணி அரசு அமைந்தால் நமக்கான நிறைய திட்டங்களை பெற முடியும் எனவும் மேற்கு மண்டலத்தில் மிகப்பெரிய வெற்றி கிடைக்கும்” எனத் தெரிவித்தார்.

Tags:    

Similar News