திமுகவை மிரட்டி விடலாம் என பாஜக செயல்படுகிறது: எம்பி கனிமொழி

சிபிஐ, அமலாக்கத்துறையைப் பயன்படுத்தி திமுகவை மிரட்டி விடலாம் என பாஜக செயல்படுகிறது என எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.;

Update: 2023-11-30 16:12 GMT
சிபிஐ, அமலாக்கத்துறையைப் பயன்படுத்தி திமுகவை மிரட்டி விடலாம் என பாஜக செயல்படுகிறது எம்பி கனிமொழி பேட்டி
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

அருப்புக்கோட்டையில் தனியார் திருமண மண்டபத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வினாடி வினா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி பங்கேற்றார். நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கனிமொழி எம்பி தற்போது இருக்கக்கூடிய பாஜக அரசாங்கம் வருமான வரித்துறை, சிபிஐ, அமலாக்கத்துறை ஆகிய மூன்றையும் தன்னை எதிர்க்கக் கூடியவர்கள் மீது பயன்படுத்துகிறது.

திராவிட முன்னேற்றக் கழகத்தை மிரட்டி விடலாம் என்ற எண்ணத்தில் அவர்கள் செயல்படுகிறார்கள் ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் இந்தியா கூட்டணிக்கும் நாட்டிற்கும் நம்பிக்கையை தரக்கூடிய முடிவாக அமையும் இந்தியா கூட்டணி பிரதமர் வேட்பாளர் குறித்து ஐந்து மாநில தேர்தல் முடிவுக்கு பின் தலைவர்கள் கூடி முடிவு செய்வார்கள் என பேசினார்.

Tags:    

Similar News