தேனி: இந்து எழுச்சி முன்னணி கார்யாலயத்தில் வார வழிபாடு
தேனி இந்து எழுச்சி முன்னணி கார்யாலயத்தில் வார வழிபாடு நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-19 15:48 GMT
இந்து முன்னணி
தமிழகம் முழுவதும் கோடை மழையின் காரணமாக நீர் நிலைகளில் தேங்கும் தண்ணீர் மற்றும் ஆறுகளில் ஏற்படும் திடீர் காட்டாற்று வெள்ளம் இவற்றால் மனித உயிர்களுக்கு ஏற்படும் பாதுகாப்பற்ற சூழ்நிலையை கருத்தில் கொண்டு நீர் நிலைகளில் எச்சரிக்கை பலகை வைப்பதோடு நீர் நிலைகள் தீயணைப்புத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்க ஆவண செய்ய வேண்டும் தேனி நகரில் சில ஆண்டுகளாக மதுரை ரோட்டில் நடைபெற்று வரும் மேம்பால பணிகளின் காரணமாக பொதுமக்களுக்கு போக்குவரத்து மிகவும் சிரமமாக உள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகம் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு மேம்பால பணிகளை முடித்து விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.