மீன் கமிஷன் மார்க்கெட் அமைக்க பாஜகவினர் எதிர்ப்பு

கொல்லஞ்சியில் மீன் மார்க்கெட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

Update: 2024-03-19 08:42 GMT

 ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் மார்க்கெட் அருகே லாரிப்பேட்டையில் மீன் மொத்த கமிஷன் மார்க்கெட் செயல்பட்டு வந்தது மார்க்கெட் நவீன வடிவமைப்பில் கட்டப்படுவதால் இந்த பகுதியில் தற்காலிக காய்கறி மார்க்கெட் இடம் மாற்றம் செய்யப்பட்டது. இதற்கு மீன் மொத்த வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மாற்று இடத்திற்கு மீன் மார்க்கெட் கொண்டு செல்ல கால அவகாசம் கொடுக்கப்பட்டது. இருப்பினும் முறையாக மாற்றப்படவில்லை. இந்த நிலையில் நல்லூர் பஞ். கொண்டு செல்ல முயற்சி செய்யப்பட்டது. அந்தப் பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் கொல்லஞ்ஜி கிராம பஞ்சாயத்துக்கு மாற்ற அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மேலும் கோயில், குளம், வாய்க்கால் போன்றவை உள்ளது. எனவே இங்கு மீன் மொத்த கமிஷன் மார்க்கெட் வந்தால் சுகாதாரம் சீர்கெடும் கிராம பொதுமக்கள் பாதிக்கப்படுபவர்கள், கொல்லஞ்சிக்கு மீன் மார்க்கெட் கொண்டு செல்ல முயற்சி செய்வதை கண்டித்து பாஜ சார்பில் கொல்லஞ்சி ஜங்ஷனில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
Tags:    

Similar News