பாஜ., பிரச்சார இயக்கம்

பள்ளிபாளையத்தில் மத்திய அரசின் சாதனைகள் குறித்து பாஜ.,வினர் பிரச்சார இயக்கம் மேற்கொண்டனர்.

Update: 2024-01-12 14:26 GMT

பள்ளிபாளையத்தில் மத்திய அரசின் சாதனைகள் குறித்து பாஜ.,வினர் பிரச்சார இயக்கம் மேற்கொண்டனர்.  

நாமக்கல் மேற்கு மாவட்டம் பள்ளிபாளையத்தில் பாரத பிரதமர் மோடி அவர்களின், 10 ஆண்டுகால சாதனை விளக்க சங்கல்ப யாத்திரையின் ஒரு பகுதியாக பள்ளிபாளையம் நகர பாஜக பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் ஏராளமான பொது மக்களுக்கு மோடி அவர்களின் பத்தாண்டு சாதனைகளை விளக்கி, சாதனை விளக்க புத்தகங்கள், மற்றும் காலண்டர்கள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில்மோடியின் பத்தாண்டு ஆட்சிகள் குறித்துடிஜிட்டல் பேனரில்படத்தொகுப்பு ஒளிபரப்பு பட்டது. இதை ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.இந்த நிகழ்வில் நாமக்கல் மேற்கு மாவட்ட பொதுச் செயலாளர் சரவணன் ராஜன், மாவட்ட செயலாளர் ஹரிஹரன் முன்னிலையில்,பள்ளிபாளையம் நகரத் தலைவர் லோகேஸ்வரன் தலைமையில்,விளையாட்டுத் திறன் மேம்பாட்டு பிரிவு மாநிலச் செயலாளர் ராஜ்குமார், மாவட்டத் துணைத் தலைவர் கனகராஜ், நகர நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், அணி பிரிவு நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்..

Tags:    

Similar News