பாஜக மகளிர் அணி சார்பில் இருசக்கர வாகன பேரணி

திருப்பூர் மாவட்ட பாஜக மகளிர் அணி சார்பில் வாகன பேரணி நடைபெற்றது.

Update: 2024-03-06 11:25 GMT

வாகன பேரணி 

மகளிர் தினத்தை முன்னிட்டு மாவட்டத் தலைவர் மங்களம் ரவி, மாநில பொதுச் செயலாளர் திருமதி மோகனப்பிரியா சரவணன், வழிகாட்டலில்,திருப்பூர் தெற்கு மாவட்டம் மகளிர் அணியின் சார்பாக சக்தி வந்தன் இரு சக்கர வாகன பேரணி மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இதனை மகளிர் அணியின் மாவட்ட தலைவர் Dr.L.கார்த்திகா தலைமை தாங்கினார்.மாவட்ட செயலாளர் மகளிர் அணியின் பார்வையாளர் திருமதி.கல்பனா செந்தில் வடிவேல் கொடியசைத்து துவக்கி வைத்தார். மாவட்ட பொதுச் செயலாளர்கள் திருமதி ஞானசௌந்தரி திருமதி ராதிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மகளிர் அணியின் மண்டல் தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர்.பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி ஜி அவர்களின் பத்தாண்டு கால சாதனைகளை விளக்கி நடைபெற்ற இந்த வாகன பேரணி 50க்கும் மேற்பட்ட வாகனங்களுடன் மிக சிறப்பாக நடைபெற்றது.

Tags:    

Similar News