நெல்லையில் பரபரப்பு ஏற்படுத்திய பாஜ.,வினர்
நெல்லை மாநகராட்சியில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்த திமுக கவுன்சிலர்களை காணவில்லை என பாஜ.,வினர் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நெல்லை மாநகராட்சி மேயருக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் 38 பேர் ஒன்றிணைந்து நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு மாநகராட்சி ஆணையரிடம் மனு அளித்த நிலையில் இன்றைய தினம் மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கான கூட்டம் நடத்தப்பட்டது.
இதில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்த திமுக மாமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சியை சேர்ந்த அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் என எந்த ஒரு மாநகராட்சி மன்ற உறுப்பினர்களும் பங்கேற்காத காரணத்தால் நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வியடைந்தது. இந்த நிலையில் தற்போதைய மாநகராட்சி மேயர் சரவணன் தொடர்ந்து மேயராக செயல்படுவது உறுதியானது. வரும் ஒரு ஆண்டு காலத்திற்கு நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் முற்றிலும் இல்லாத நிலையும் உருவானது.
ந்த சூழலில் நெல்லை மாநகராட்சி மன்ற கூட்டத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்த திமுக உறுப்பினர்கள் கூட தீர்மானம் தொடர்பான கூட்டத்தில் கலந்து கொள்ளாததை சுட்டிக்காட்டும் வகையில் நெல்லை வடக்கு மாவட்ட பாஜக தச்சநல்லூர் மண்டல் சார்பில் நெல்லை மாநகர் பகுதி முழுவதும் பரபரப்பான வாசகங்கள் அடங்கிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
நெல்லை மாநகராட்சியில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்த திமுக கவுன்சிலர்களை காணவில்லை என பாஜ.,வினர் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.