ஆர்.பி உதயகுமார் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய கோரி பாஜக மனு

முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய கோரி மாவட்ட ஆட்சியரிடம் பாஜகவினர் மனு அளித்தனர்.

Update: 2024-02-13 02:42 GMT

புகார் அளிக்க வந்த பாஜகவினர் 

மதுரை மாநகர் பாரதிய ஜனதா கட்சியின் மாநகர் மாவட்ட தலைவர். மகாசுசீந்திரன் ஆலோசனையின் பேரில் பா.ஜ.க சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரிவின் மாவட்ட தலைவரும் தாமரை சேவகன் குழுவின் ஒருங்கிணைப்பாளருமாகிய வக்கீல். எஸ். முத்துக்குமார் தலைமையில் மகளிரணி மாவட்ட தலைவி. ஒம்சக்திதனலட்சுமி, ஊடக பிரிவு மாவட்ட தலைவர். வேள்பாண்டியன் முன்னிலையில், மகளிரணி பொது செயலாளர். ராஜேஸ்வரி, துணை தலைவி செல்விகிருஷ்ணன், லிங்கேஸ்வரி, கவிதா மாவட்ட செயலாளர். ஜெயலட்சுமி ஆகியோர் மதுரை மாவட்ட கலெக்டர் குறை தீர்க்கும் நாளில் கலெக்டர். சங்கீதாவை சந்தித்து ஒரு மனு அளித்தனர்.

அதில் அ.தி. மு.க முன்னாள் அமைச்சரும் இந்நாள் எம். எல்.ஏ வுமான ஆர்.பி. உதயகுமார் மதுரை மாநகராட்சி 35 வது வார்டில் செண்பகதோட்டம், எச்.ஐ.ஜி குடியிருப்பில் ஒரு வீடு வைத்துள்ளார். அந்த வீட்டின் முன்புறமும் பக்கவாட்டிலும் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து வீட்டிலிருந்து மின்சார இணைப்பு கொடுத்து ரூம்களாக பிரித்து ஷெட் அமைத்து தனது உறவினர்களை தங்க வைத்து தானும் கட்சி அலுவலகம் போல் பயன் படுத்துகிறார். அ.தி.மு.க ஆட்சி காலத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நில அபகரிப்பு தடுப்பு சட்டம் கொண்டு வந்தார். அந்த நேரத்தில் அமைச்சராக இருந்த உதயகுமார் வேண்டுமென்றே தனது சுய நலனுக்காக இந்த இடத்தை ஆக்கிரமித்து தனது சொந்த உபயோகதிற்கு பயன் படுத்தி வருகிறார்.

நில ஆக்கிரமிப்பு சட்டம் 1905, நில அபகரிப்பு தடுப்பு சட்டம் -2011, இந்திய தண்டனை சட்டம் - 347 மற்றும் நில அபகரிப்பு செய்பவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய ஏதுவாக உச்ச நீதிமன்றம் உத்திரவு படி, அரசு ஆணை 119/2023 ன் படி மாநில அளவில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஏற்படுத்த பட்ட உயர் மட்ட குழு அனைத்தும் செயல்பாட்டில் இருக்கும் போது சமூக பணியில் முதுநிலை பட்டமும், சட்டப்படிப்பில் இளநிலை பட்டமும் பெற்றதாக கூறி தம்பட்டம் அடித்து கொள்ளும் உதயகுமார் இவ்வாறு சமூக நலன் இல்லாமலும், சட்டம் பற்றி அறியாமலும் அரசு இடத்தை அபகரித்து இருப்பது சட்ட விரோத செயலாகும். ஏற்கனவே சென்னை கோயம்பேடு அருகே அரசு நிலத்தை அபகரித்ததாக சரவணபவன் ஹோட்டல் பவர் எஜென்ட்டான பஷீயம் நிறுவனம் சம்பந்த பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் நீதிபதி. சுப்பிரமணியன்

அடுத்தவர் நிலத்தை அபகரிப்பது திருடுவதற்கு சமம். அதிலும் அரசு நிலத்தை அபகரிப்பது அரசுக்கு எதிரான் குற்றம். அவர்கள் மீதும் அவர்களுக்கு உடந்தையாக இருந்த அரசு அதிகாரிகள் மீதும் கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டுமென தெளிவாக குறிப்பிட்டுள்ளார். ஆகவே உதயகுமார் மீதும் அவரது சட்ட விரோத ஆக்கிரமிப்புக்கு உடந்தையாக இருந்த அரசு அதிகாரிகள் மீது கிரிமினல் வழக்கு தொடுக்க வேண்டுமெனவும், அபகரிப்பு செய்ய பட்ட நிலத்தை மீட்டு வேலி அமைத்து பொது பயன் பாட்டிற்கு விட வேண்டுமெனவும் கோரியுள்ளனர். புகார் மனுவை பெற்று கொண்ட கலெக்டர். சங்கீதா உரிய நடவடிக்கைகாக மாநகர காவல் ஆணையருக்கு அனுப்பி வைத்தார்.

Tags:    

Similar News