கருப்பு கொடி விவகாரம்: கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் விடுதலை

தமிழ்நாடு முதல்வருக்கு எதிராக கருப்பு கொடி காட்ட முயன்ற வழக்கறிஞர் கைது செய்யப்பட்டு மாலை விடுதலை செய்யப்பட்டார்.;

Update: 2024-03-04 14:58 GMT

விடுதலை செய்யப்பட்ட வழக்கறிஞர் 

மயிலாடுதுறை அருகே எடுத்துக்கட்டியை சேர்ந்தவர் வழக்கறிஞர் சங்கமித்ரன். இவரை 2012 ஆம் ஆண்டு இரவு நேரத்தில் வெட்டி க்கொல்ல நடந்த முயற்சியில் மயிலாடுதுறை அதிமுக மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் உட்பட பத்துக்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

கடந்த 12 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காத காவல்துறை கண்டித்தும், அதிமுக ஆட்சி முடிவடைந்து திமுக ஆட்சிக்கு வந்தும் நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும் இது குறித்து தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் தமிழக முதல்வர் மயிலாடுதுறையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திறக்க வரும்போது கருப்பு கொடி காட்ட அறிவித்திருந்தார்.

Advertisement

இதை அறிந்த போலீசார் இன்று காலை பொறையார் காவல் நிலைய ஆய்வாளர் மணிமாறன் தலைமையில் ஐந்துக்கும் மேற்பட்ட போலீசார் அவர் வீட்டிற்கு சென்று அவரை கைது செய்து பொறையார் காவல் நிலையம் அழைத்துச் சென்று வைத்திருந்தனர்.

தமிழக முதலமைச்சர் சென்னைக்கு ரயிலில் சென்றதும் பொறையார் போலீசார் வழக்கறிஞர் ஷங்கமித்திரனை விடுதலை செய்தனர். வழக்கறிஞர் சங்கமித்ரன் கூறுகையில், எனது போராட்டம் தொடரும் என்றும் கூறினார்.

Tags:    

Similar News