உசிலம்பட்டியில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

கள்ளர் பள்ளிகளை அரசுப்பள்ளிகளோடு இணைப்பதைக் கண்டித்து உசிலம்பட்டியில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Update: 2024-06-28 10:53 GMT

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 

கள்ளர் பள்ளிகளை அரசுப்பள்ளிகளோடு இணைப்பதைக் கண்டித்து உசிலம்பட்டியில் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக முழுவதும் கள்ளர் பள்ளி மற்றும் ஆதிதிராவிடர் பள்ளிகளை பெயர் மாற்றம் செய்து அரசு பள்ளிகளோடு இணைக்க ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி சந்துரு கமிஷன் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.கள்ளர் பள்ளிகளை அரசுப்பள்ளிகளோடு இணைப்பதற்கு தென்மாவட்டங்களில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில்,

இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு தமிழ்நாடு நேதாஜி இளைஞர் நற்பணி இயக்கம் மற்றும் தெற்கிந்திய தேசியவாதிகள் சங்கம் முன்னாள் மாணவர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கள்ளர் பள்ளிகளை அரசு பள்ளிகளோடு இணைப்பதை கண்டித்து கோஷங்கள் எழுப்பியும் திமுக அரசைக் கண்டித்தும் கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News