பூந்தமல்லி அருகே பார்வையற்ற மாணவர்கள் சாலை மறியல்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காட்டுப்பாக்கத்தில் பார்வையற்ற மாணவர்கள் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.;

Update: 2024-02-27 03:29 GMT

சாலை மறியல் 

பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சில தினங்களாக போராடி வருகின்றனர் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பார்வையற்ற மாணவர்கள் சங்கம் சார்பில் பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கத்தில் பார்வையற்ற மாணவர்கள் 50க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பார்வையற்ற மாணவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என கோஷங்கள் எழுப்பினார்கள். 

Advertisement

இதனால் பூந்தமல்லி டிரங்க் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து பூந்தமல்லி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பூந்தமல்லி போலீசார் சம்படத்துக்கு விரைந்து வந்து சாலை மறியல் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.  அவர்கள் கலந்து செல்ல மறுத்ததால் சாலை மறியலில் ஈடுபட்ட பார்வையற்ற மாணவர்களை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தி அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Tags:    

Similar News