பாதாள சாக்கடையில் அடைப்பு சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்
பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
Update: 2024-05-16 14:30 GMT
காஞ்சிபுரம் ராஜாஜி மார்க்கெட் பின்புறம் உள்ள புது தெருவில், 100க்கும் மேற்பட்ட வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளன. வாகன போக்குவரத்தும், பொதுமக்கள் நடமாட்டம் நிறைந்த இத்தெருவில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, ஒரு வாரமாக கழிவுநீர் சாலையில் வழிந்தோடி வருகிறது. இதனால், நடந்து செல்வோர் கழிவுநீரில் நடந்து செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது. வேகமாக செல்லும் வாகனங்களால் கழிவுநீர் தெளிப்பதால், பாதசாரிகள் மனஉளச்சலுக்கு ஆளாகின்றனர். இப்பகுதியில் அடிக்கடி கழிவுநீர் வழிந்தோடுவதால், சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே, நிரந்தர தீர்வாக பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.