தென்கரையில் பாதாள சாக்கடையில் அடைப்பு: கோவில் வாசலில் கழிவுநீர்
தென்கரை பகுதியில், ஜெயகணபதி, பாலமுருகன் கோவில் ஒட்டியுள்ள பகுதியில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் சர்வதீர்த்த குளக்கரையை சுற்றிலும் 10க்கும் மேற்பட்ட சிவன் கோவில்கள் உள்ளன. இக்கோவில்களுக்கு செல்லும் வழிகளில் ஒன்றான சர்வதீர்த்தம் தென்கரை பகுதியில், ஜெயகணபதி, பாலமுருகன் கோவில் ஒட்டியுள்ள பகுதியில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால், ஆறு மாதத்திற்கு மேலாக 'மேன்ஹோல்' வழியாக வெளியேறும் கழிவுநீர் சாலையில் வழிந்தோடுவதால் அப்பகுதியில் வசிப்போர், சிவன் கோவில்களுக்கு செல்லும் பக்தர்கள் கழிவுநீரில் நடந்து செல்ல வேண்டிய அவலநிலை உள்ளது. தொடர்ந்து வெளியேறும் கழிவுநீரால் துர்நாற்றம் வீசுகிறது.
இதனால், இப்பகுதியினருக்கு தொற்றுநோய் ஏற்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே, பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்."