காங்கேயத்தில் இரத்த தான முகாம்
காங்கேயம் திருநீலகண்டர் வீதி அருணாச்சல உடையார் தோட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது;
By : King 24X7 News (B)
Update: 2024-05-27 15:26 GMT
ரத்ததான முகாம்
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் திருநீலகண்டர் வீதி, அருணாச்சல உடையார் தோட்டத்தில் நேற்று காலை 9 மணி முதல் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மற்றும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் காரல் மார்க்ஸின் 206ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு இரத்த தான முகாம் நடத்தப்பட்டது.
இம்முகாமிற்கு முகேஷ் பாலாஜி தலைமை தாங்கினார். கே.பி. நவீன் மற்றும் என். சௌமியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இம்முகாமில் 18 முதல் 60 வயதுடையவர்கள் கலந்து கொண்டு 42 யூனிட் இரத்த தானம் செய்தனர். இதனை அடுத்து சேகரிக்கப்பட்ட இரத்தம் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.