உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் : அரசு மருத்துவமனையில் ரத்த தான முகாம்
Update: 2023-12-05 07:49 GMT
ரத்த தான முகாம்
திராவிட முன்னேற்றக் கழக இளைஞரணி செயலாளர் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு இரத்த தான முகாம் கடலூர் அரசு பொது மருத்துவமனையில் நடந்தது. கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் வழிகாட்டுதலில் இம்முகாமிற்கான சிறப்பு ஏற்பாடுகளை மருத்துவர் பிரவீன் ஐயப்பன் செய்திருந்தார். உடன் மாமன்ற உறுப்பினர்கள், திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள், மற்றும் கடலூர் அரசு தலைமை மருத்துவமனை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.