எஸ் எஸ் எம் சென்ட்ரல் பள்ளி சார்பாக இரத்ததான முகாம்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா, சீராம்பாளையத்தில் உள்ள எஸ்.எஸ்.எம்.சென்ட்ரல் பள்ளி சார்பாக ரத்ததான முகாம் நடைபெற்றது.

Update: 2024-06-14 17:59 GMT

ரத்த தான முகாம் 

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா, சீராம்பாளையத்தில் உள்ள எஸ்.எஸ்.எம்.சென்ட்ரல் பள்ளி சார்பாக ரத்ததான முகாம் நடைபெற்றது.

திருச்செங்கோடு அரசு மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் G.செந்தில்குமார் தலைமையிலான மருத்துவர் குழு உடன் இணைந்து நடத்திய இந்த ரத்ததான முகாமில் இப்பள்ளியைச் சேர்ந்த 52-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் பெற்றோர்களும் கலந்துகொண்டு ரத்த தானம் செய்தனர்.

ரத்ததானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, இப்பள்ளியின் தாளாளர் K.P.E..ரவீந்திரன் வழிகாட்டுதலின் பேரில் நடைபெற்றது. இம்முகாமில் பள்ளியின் முதல்வர் K.A. மிராஸ் கரீம் வரவேற்புரை வழங்கினார். அப்போது அவர் ரத்த தானம் செய்ய வேண்டிய அவசியத்தைப் பற்றியும் உயிர்களின் மதிப்பை பற்றியும் பேசினார். இந்நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சரண்யா உடன் இணைந்து உடற்கல்வி இயக்குனர்கள் விஜயகுமார், ஆண்டனி, வசந்த், யுவராணி ஆகியோர் செய்திருந்தனர். மேலும் இந்த ரத்ததான முகாமில் திருச்செங்கோடு அரசு மருத்துவமனை மருத்துவ குழாமை சேர்ந்த T.மனோகர், A.மைக்கேல் ராஜ், V.சூர்யா , ரத்த வங்கி பணியாளர்கள் மற்றும் மாணவ மாணவிகள் உதவியுடன் ரத்தம் சேகரித்தனர்.

Tags:    

Similar News