பொன்னமராவதியில் ரத்ததான தின விழிப்புணர்வு பேரணி
பொன்னமராவதியில் ரத்ததான தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-16 16:20 GMT
விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டவர்கள்
பொன்னமராவதியில் உலக ரத்த கொடையாளர் தினத்தை ஒட்டி துர்கா மருத்துவ மனை, துர்கா செவிலியர் கல்லூரி அமலா அன்னை மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றின் சார்பில் விழிப்புணர்வு பேரணி நடந்தது.
வர்த்தக கழக தலைவர் பழனியப்பன் பேரணியை தொடங்கி வைத்தார். சிறப்பு இன்ஸ்பெக்டர் பெருமாள் டாக்டர் செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமலா அன்னை மெட்ரிக் பள்ளி துணை முதல்வர் பிரின்ஸ் ரத்த தானம் விழிப்புணர்வு குறித்து பேசினார். பங்கேற்றோர் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி செல்கின்றனர்.
முன்னதாக ரத்ததான விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. துர்கா செவிலியர் கல்லூரி மாணவிகள் அமலா அன்னை மெட்ரிக் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.