பூத்துக்குலுங்கும் பருத்திச் செடிகள் - விவசாயிகள் மகிழ்ச்சி

நாகை மாவட்டம், திருமருகல் பகுதியில் பருத்தி செடிகள் அதிக அளவில் பூத்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2024-04-08 09:39 GMT
பருத்தி செடிகள்

நாகை மாவட்டம் , திருமருகல் ஒன்றிய பகுதிகளில் சம்பா நெல் அறுவடை பணிகள் முழுவதும் முடிவடைந்த நிலையில் தொடர்ந்து கோடை சாகுபடியான உளுந்து,பயறு சாகுபடி செய்து இருந்தனர்.உளுந்து,பயறு அறுவடை பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது.தற்போது திருமருகல் ஒன்றிய பகுதியான திருமருகல், சியாத்தமங்கை, ஆலத்தூர், சேஷமூலை, இடையாத்தங்குடி, திருப்புகலூர், விற்குடி, வாழ்குடி, குத்தாலம், நரிமணம், எரவாஞ்சேரி, மருங்கூர், நெய்குப்பை, மேலப்பூதனூர், திருக்கண்ணபுரம்,கோட்டூர், வடகரை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் பருத்தி சாகுபடி செய்துள்ளார்.

பருத்தி சாகுபடிக்கு தண்ணீர் அதிகளவில் தேவைப்படுவதில்லை.15 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.ஆற்று பாசனத்தை பெரும்பாலும் நம்பியுள்ள மேற்கண்ட பகுதி விவசாயிகள்,ஆற்றின் நீர் வற்றியதால் நிலத்தடி நீரை பயன்படுத்தி ஆழ்துளை கிணறுகள் மூலம் பருத்தி சாகுபடி மேற்கொண்டு வருகின்றனர்.பருத்தி முளைத்து 50 நாட்களில் பருத்தி பூ பூக்க ஆரம்பித்து 100 நாட்களில் பருத்தியை அறுவடை செய்ய ஆரம்பிக்கலாம்.பணப்பயிரான பருத்திக்கு இந்த ஆண்டு நல்ல விலை கிடைக்கும் என்று விவசாயிகள் நம்பிக்கையாக உள்ளனர்.

Tags:    

Similar News