ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு புறப்பட்ட படகுகள்
தூத்துக்குடியில் 60 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து இன்று அதிகாலை 5 மணி முதல் தூத்துக்குடி, தருவைகுளம், வேம்பார் ஆகிய பகுதிகளிலிருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு சென்றது.
மீன்களின் இனப்பெருக்கத்திற்காக 60 நாட்கள் ஆழ்கடல் மீன்பிடிக்க விசைப்படகுகள் மீன்பிடிப்பிற்கு தமிழக அரசு தடை விதித்திருந்தது இந்த தடைக்காலம் நேற்று இரவு நள்ளிரவு முதல் நீங்கியதை தொடர்ந்து ஜூன் 15 இன்று அதிகாலை முதல் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி, தருவைகுளம், வேம்பார் ஆகிய பகுதிகளிலிருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் இன்று அதிகாலை முதல் கடலுக்கு மீன் பிடிக்க சென்றன
தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து60 நாட்களுக்கு பின்பு கடலுக்கு செல்வதால் விசைப்படகுகள் ஒன்றோடு ஒன்று மோதியபடி கடலுக்கு ஆர்வமாக சென்றனர். மேலும் விசைப்படகுகள் கடலுக்குச் செல்வதை மீனவர்கள் ஆர்வமுடன் பார்த்தனர். இந்நிலையில் 60 நாட்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருந்த தாங்கள் இன்று நம்பிக்கையுடன் கடலுக்குச் செல்கிறோம் அதிக அளவு மீன்கள் கிடைக்கும் என நம்பிக்கை இருப்பதாக விசைப்படகு உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் தெரிவித்தனர்