நெல்லையில் படகுகள் நிறுத்தி வைப்பு
கனமழை எச்சரிக்கை காரணமாக நெல்லையில் 1000க்கும் மேற்பட்ட படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.;
Update: 2024-05-17 03:56 GMT
மழை எச்சரிக்கை காரணமாக நெல்லையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகள்
நெல்லை மாவட்டத்தில் கனமழை எச்சரிக்கை காரணமாக கடலில் அதிகபட்சமாக மணிக்கு 55 கிலோமீட்டர் வேகம் வரை காற்று வீசப்படும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என நேற்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இதனை தொடர்ந்து இன்று (மே 17) கடலுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்லாததால் 1000க்கும் மேற்பட்ட படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.