ஓய்வு பெற்ற அரசு ஊழியர் உடல் தானம்
மதுரையில் உயிரிழந்த ஒய்வு பெற்ற அரசு ஊழியர் உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் சிங்கப்பன், பல்வேறு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கத்தினுடைய மாநில, மாவட்டத்தலைவராக பொறுப்பில் இருந்து, நிர்வாகிகளுக்காக பல்வேறு உதவிகளை செய்து வந்தவரும், அச் சங்கங்களில் பொறுப்பாளராகவும் இருந்து வந்த நிலையில், இன்று உடல்நலக் குறைவால் தனது வீட்டில் காலமானார் .
முன்பே சிங்கப்பன் தனது மனைவி இறந்த போதே, தனது உடலை தானம் கொடுப்பதற்கு ஆவணங்களில் கையொப்பமிட்டிருந்தார். அதன்படி , சிங்கப்பனின் உடல் இன்று அவரது வீட்டில் இருந்து, மதுரை மருத்துவக் கல்லூரிக்கு தானமாக பெற்று எடுத்துச் சென்றனர். இது குறித்து சிங்கப்பனின் நண்பர் கூறுகையில் , சிங்கப்பன்உயிரோடு இருக்கும்போது தனது உடல் முழுவதையும் மதுரை மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பயன்படும் வகையில் மருத்துவ படிப்பிற்காகவும் , தனது மகள் அக் கல்லூரி -யில் துணை முதல்வராக இருப்பதால் , அவரது விருப்பத்திற்கு ஏற்ப தனது உடலை தானமாக அளிக்க முன்பே உறுதி அளித்துள்ளதை தெரிவித்தார்.