வேலூரில் கிணற்றில் அழுகிய நிலையில் ஆண் பிணம் மீட்பு

வேலூரில் கிணற்றில் அழுவிய நிலையில் ஆண் சுடலும் மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-05-14 09:38 GMT

காவல் நிலையம்

வேலூர் சங்கரன்பாளையத்தில் காலி இடத்தில் கிணறு ஒன்று உள்ளது. அதில் இருந்து துர்நாற்றம் வீசியது. அந்த வழியாக சென்றவர்கள் கிணற்றுக்குள் பார்த்தபோது அழுகிய நிலையில் ஆண் பிணம் மிதந்தது. இதுகுறித்து அவர்கள் பாகாயம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து உடலை கைப்பற்றி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், இறந்த நபருக்கு சுமார் 45 வயது இருக்கும். அவர் குறித்த விவரங்கள் தெரியவில்லை.

அவர் இறந்து 3 நாட்களுக்கு மேலாகியிருக்கும் என்றனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News