துப்பாக்கி குண்டுகள் முழங்க காவல் ஆய்வாளர் உடல் தகனம்

சாலை விபத்தில் உயிரிழந்த பெண் காவல் ஆய்வாளரின் உடல் 30 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.;

Update: 2024-04-10 08:24 GMT

புதுக்கோட்டை பழைய மருத்துவமனை அருகே உள்ள வேகத்தடை மீது கணவருடன் இரு சக்கர வாகனத்தில் பயணித்த போது விபத்தில் சிக்கி பெண் காவல் ஆய்வாளர் பிரியா (வயது 45 )நிலை தடுமாறி கீழே விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்தார் .இந்த நிலையில் கடந்த 7ம் தேதி திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 9) காலை 11 மணியளவில் சிகிச்சை பலனின்றி காவல் ஆய்வாளர் பிரியா உயிரிழந்தார்.

Advertisement

இந்த நிலையில் உயிரிழந்த காவல் ஆய்வாளர் பிரியா உடல் நேற்று (ஏப்ரல் 9) மாலை அவரது சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்திற்கு கொண்டுவரப்பட்டது. அவரது உடலை எஸ்பி வந்திதா பாண்டே மற்றும் காவல்துறை அதிகாரிகள் சுமந்து வந்தனர். உடலுக்கு டிஎஸ்பிகள் ராகவி, பவுல்ராஜ், கௌதம் மற்றும் ஏராளமான போலீசார் அஞ்சலி செலுத்தினர். பின்னர் 30 துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது.

Tags:    

Similar News