தண்டவாளத்தில் வாலிபர் சடலம்
தண்டவாளத்தில் வாலிபர் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-17 12:12 GMT
சடலம் மீட்பு
திண்டுக்கல்: பழனி அருகே தண்டவாளத்தில் வாலிபர் பணம் கிடப்பதால் போலீசார் சந்தேகத்தின் பெயரில் விசாரித்து வருகின்றனர். பழனி அருகே உள்ள சாமிநாதபுரம்,ரயில்வே தண்டவாளத்தில் வாலிபர் இறந்து கிடப்பதாக பழனி ரயில்வே போலீசாருக்கு வந்த தகவலின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் பொன்னுச்சாமி தலைமையிலான, ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
போலீசார் விசாரணையில் இறந்தவர் மடத்துக்குளம் அருகே உள்ள மெட்ராசி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என தெரியவந்தது. இறந்தவர் உடலை மீட்டு பழனி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கபட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.