புத்தக கண்காட்சி நிறைவுவிழா

குமாரபாளையத்தில் புத்தக கண்காட்சி நிறைவுவிழா மற்றும் கணித மேதை ராமானுஜம் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.;

Update: 2023-12-24 12:16 GMT

புத்தக கண்காட்சி நிறைவு

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் விடியல் ஆரம்பம் பொதுநல அமைப்பு சார்பாக மூன்றாம் ஆண்டு புத்தகக் கண்காட்சி பள்ளிபாளையம் பிரிவு சாலை அருகே, சம்பூரணி அம்மாள் திருமண மண்டபத்தில் டிச.15ல் துவங்கியது. இதன் நிறைவுவிழா அமைப்பாளர் பிரகாஷ் தலைமையில் நடந்தது. நூல் எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், புத்தக கண்காட்சி நடத்த உறுதுணையாக இருந்தவர்கள், பள்ளி மாணவர்களை அனுப்பி வைத்த தலைமை ஆசிரியர்கள், பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவியர் என பலதரப்பட்டவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.

Advertisement

அரசு உதவி பெறும்  சி.எஸ்.ஐ. நடுநிலைப்பள்ளி சார்பில் வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடந்தது. இதில் புத்தகத்தின் அருமை குறித்தும், புத்தக கண்காட்சியின் அத்தியாவசியம் குறித்தும் மாணாக்கர்கள் வில்லுப்பாட்டு மூலம் எடுத்துரைத்தனர். கணிதமேதை ராமானுஜம் பிறந்த நாளையொட்டி, அவரது திருவுருவப்படத்திற்கு மலர் மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. ராமானுஜம் குறித்து பேச்சு, கட்டுரை, ஓவியம், வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை சிறு, குறு ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் பிரபாகரன் உள்ளிட்ட பலர் வழங்கினர். இதில் சமூக சேவகி சித்ரா, தன்னார்வலர்கள் ஜமுனா, சித்ரா, நிர்வாகிகள் தீனா, பஞ்சாலை சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News