மேலசிவபுரி கல்லூரியில் புத்தகத் திருவிழா!

பொன்னமராவதி அருகே உள்ள மேலசிவபுரி கணேசன் கலை அறிவியல் கல்லூரியில் இரு நாட்கள் புத்தகத் திருவிழா நடைபெற்றது.;

Update: 2024-02-14 04:56 GMT


பொன்னமராவதி அருகே உள்ள மேலசிவபுரி கணேசன் கலை அறிவியல் கல்லூரியில் இரு நாட்கள் புத்தகத் திருவிழா நடைபெற்றது.


பொன்னமராவதி அருகே உள்ள மேலசிவபுரி கணேசன் கலை அறிவியல் கல்லூரியில் இரு நாட்கள் புத்தகத் திருவிழா நடைபெற்றது. இக்கல்லூரியின் 114 வது ஆண்டுகள் தொன்மை வாய்ந்த தொல்காப்பியர் நூலகம் சார்பில் நடைபெற்ற விழாவுக்கு கல்லூரி குழு தலைவர் அ.சாமிநாதன் தலைமை வகித்தார். கல்லூரி செயலர் சி. ரமணப்பிரியன், சன்மார்க்க சபை செயலர் பழ. சாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சன்மார்க்க சபை தலைவர் சி. நாகப்பன் புத்தக திருவிழாவை தொடங்கி வைத்தார்.

Advertisement

இதில் திருச்சி காவேரி பதிப்பகம், புதுக்கோட்டை என்சிபிஹெச் உள்ளிட்ட பல்வேறு பதிப்பகங்கள் சார்பில் கலை, இலக்கியம், வரலாறு, பொது அறிவு மற்றும் போட்டி தேர்வு நூல்கள் உள்ளிட்ட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. கண்காட்சியை கல்லூரி மாணவ மாணவியர் பேராசிரியர்கள் பார்வையிட்டு பயனடைந்தனர். முன்னதாக கல்லூரி முதல்வர் பழனியப்பன் வரவேற்றார். கல்லூரியின் நூலகர் டி. ஆர். தெய்வானை நன்றி கூறினார்.

Tags:    

Similar News