மயிலாடுதுறையில் புத்தகத் திருவிழா நிறைவு

மயிலாடுதுறையில் புத்தகத் திருவிழாவின் இறுதி நாளான நேற்று ஆயிரக்கணக்கான பொதுமக்கள் புத்தகங்களை வாங்க ஒரே நேரத்தில் குவிந்தனர்.

Update: 2024-02-13 04:46 GMT

புத்தக திருவிழா 

மயிலாடுதுறையில் கடந்த 2ம் தேதி துவங்கிய மாவட்டத்தின் இரண்டாவது புத்தக திருவிழா  முடிவடைந்தது. தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம், பள்ளிகல்வித்துறை, பொதுநூலக இயக்ககம் சார்பில் நடைபெற்ற புத்தக திருவிழாவில்  தமிழகத்தின் முன்னணி பதிப்பகங்களின் 80 புத்தக விற்பனை அரங்குகள் அமைக்கப்பட்டிருந்த நிலையில் இறுதி நாளான 12ஆம் தேதி ஏராளமான பொதுமக்கள் திரண்டு புத்தகங்களை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.

தொடர்ந்து நீண்ட வரிசையில் நின்று தொலைநோக்கி மூலம் வான்வெளியை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்வையிட்டனர். சிறுவர்களுக்கு அமைக்கப்பட்ட விளையாட்டு அரங்குகளில் சிறுவர்கள் விளையாடி மகிழ்ந்தனர். பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்ற நிலையில் நான்காம் வகுப்பு படிக்கக்கூடிய அஸ்விதா என்ற சிறுமி காற்றடைத்த பலூனில் ஜிம்னாஸ்டிக் வலையத்தை சுற்றியபடி நடனமாடியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. தொடர்ந்து 10 நிமிடம் ஜிம்னாஸ்டிக் வளையத்தை சுற்றிக்கொண்டு இடைவிடாது சிறுமி நடனமாடி அசத்தினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி  உட்பட ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News