கன்னியாகுமரி லாட்ஜில் பள்ளி மாணவியுடன் சிக்கிய மாணவன்

கன்னியாகுமரி லாட்ஜில் பள்ளி மாணவியுடன் சிக்கிய மாணவனிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.;

Update: 2024-05-12 14:29 GMT
பைல் படம்

கன்னியாகுமரியில் உள்ள விடுதி ஒன்றில் சந்தேகத்திற்குரிய வகையில் இளஞ்ஜோடிகள் தங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பெயரில் கன்னியாகுமரி இன்ஸ்பெக்டர் நெப்போலியன் தலைமையிலான  போலீசார் சம்பந்தப்பட்ட லாட்ஜுக்கு சென்று சோதனை செய்தனர்.

இந்த சோதனையில் 17 வயது நிரம்பிய  பிளஸ் ஒன்று படித்து வரும் மாணவனும் மாணவியும் சிக்கினர்.       பின்னர் இருவரும்  அனைத்து மகளிர் போலீசாரிடம் மாணவி ஒப்படைக்கப்பட்டார். இரு தரப்பு பெற்றோருக்கும் தகவல் தெரிவித்து அவர்களும் சம்பவ இடத்திற்கு வந்தனர்.        அப்போது நடந்த விசாரணையில் instagram மூலம் மாணவனுக்கு மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது.

Advertisement

இருவருமே நாகர்கோவிலை சேர்ந்தவர்கள் என்று தெரிய வந்தது.        நண்பர்களுடன்  கன்னியாகுமரிக்கு செல்வதாக கூறி கன்னியாகுமரியில் வந்து அவர்கள் கடலில் குளித்து பல்வேறு இடங்களை சுற்றி பார்த்துள்ளனர். பின்னர் லாட்ஜ்-ல்  தனிமையில் இருந்த மாணவியிடம் மாணவர் பாலியல் தொல்லையில் ஈடுபட்டார் என  கூறப்படுகிறது.

இதையடுத்து மாணவியிடம் புகார் பெற்று மாணவன் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் இளம் சிறார் சிறுமிக்கு அறை ஒதுக்கீடு செய்ததாக சம்பந்தப்பட்ட லாட்ஜ் உரிமையாளர், மேலாளர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News