பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து சிறுவன் பலி
சங்கரன்கோவிலில் உள்ள பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து சிறுவன் பலி. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.;
By : King 24x7 Angel
Update: 2024-02-09 05:34 GMT
பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்து சிறுவன் பலி
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மருதப்பபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெய்சங்கர். ஜெய்சங்கர் நேற்று மாலை தனது மகள் மகிஷா (4) மகன் கனீஸ் (2) ஆகியோரை மோட்டார் சைக்கிளில் முன்பு வைத்துக் கொண்டு திருநெல்வேலி சாலையில் சென்று கொண்டிருந்தார். மோட்டார் சைக்கிள் நவநீதகிருஷ்ணாபுரம் விலக்குஅருகே போகும் போது சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் கவிழ்ந்தது. இதில் மகன் கனீஸ், மகள் மகிஷா ஆகியோர் பள்ளத்தில் தூக்கி வீசப்பட்டனர். ஜெய்சங்கர் காயமின்றி உயிர் தப்பினார். காயமடைந்த கனீஸ் மகிஷா இருவரும் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு வரும் வழியில் சிறுவன் கனீஸ் பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த சிறுமி மகிஷா சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து சின்ன கோயிலாங்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.