மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி
Update: 2023-12-18 12:24 GMT
திருப்போரூர் அடுத்த புதுப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த சசிகுமார்- - சகிலா தம்பதியின் மகன் பிரவீன்குமார், 13, இவர், நேற்று முன்தினம் மாலை 4:00 மணியளவில், தன் வீட்டிற்கு அருகே உள்ள வீட்டின் மாடியில் ஏறி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, பிரவீன்குமார் எதிர்பாராத விதமாக மாடியை ஒட்டி சென்ற மின்கம்பியை பிடித்து உள்ளார். இதில், மின்சாரம் பாய்ந்து உடல் கருகி உயிரிழந்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த கேளம்பாக்கம் போலீசார் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.