கிணற்றில் விழுந்த சிறுவன் - உயிருடன் மீட்ட தீயணைப்பு துறை

காங்கேயம் அடுத்த ஆலம்பாடியில் தண்ணீர் தொட்டி இடிந்ததில் கிணற்றுக்குள் விழுந்த சிறுவனை உயிருடன் தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

Update: 2024-05-02 05:38 GMT

திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அடுத்த ஆலாம்பாடி பஞ்சாயத்தை சேர்ந்தவர் சாமிநாதன். இவரது 15 வயது மகன் நேற்று  மாலை சுமார் 6 மணி அளவில் அப்பகுதியில் உள்ள பழனிச்சாமி என்பவரது தோட்டத்தில் உள்ள 50 அடி ஆழமும், 10 நீளம் 8 அடி அகலமுள்ள கிணற்றின்‌ மேற்பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டியில் மோட்டார் பம்பு குழாயில் வந்த தண்ணீரில் குளித்து கொண்டிருந்துள்ளான். அப்போது எதிர்பாராத விதமாக அந்த தண்ணீர் தொட்டி இடிந்து கிணற்றுக்குள் விழுந்துள்ளது.

அந்த கிணற்றுக்குள் 2 அடி ஆழம் மட்டுமே தண்ணீர் இருந்ததால் அந்த சிறுவன் கிணற்றுக்குள் இருந்து சத்தம் போட்டுள்ளான். அப்போது அருகில் இருந்தவர்கள் உடனடியாக காங்கேயம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு அந்த சிறுவனை உயிருடன் மீட்டு உறவினரிடம் ஒப்படைத்தனர். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News