சரக்கு ஆட்டோ மோதி சிறுவன் பலி
வளையமாதேவி அருகே சரக்கு ஆட்டோ,டூவீலர் மீது மோதியதில் சிறுவன் பலி.சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த டிரைவரை போலீஸார் தேடி வருகிறார்கள்.;
By : King 24x7 Angel
Update: 2024-02-06 10:22 GMT
சரக்கு ஆட்டோ மோதி சிறுவன் பலி
கெங்கவல்லி:ஆத்தூர் அருகே வளையமாதேவி அருகே வளை கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர்(50). இவரது மகன் தேவேந்திரன், மருமகள் பானுப்பிரியா. நேற்று தேவேந்திரன் மகன் அஸ்வந்து(5)க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சிறுவனை சேகர் மற்றும் பானுப் பிரியா, டூவீலரில் ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று கொண்டிருந்தனர். வளையமாதேவி பனந்தோப்பு அருகே வந்த போது, எதிரே வந்த சரக்கு ஆட்டோ,டூவீலர் மீது மோதியது. இதில் அஸ்வந்த், சேகர், பானுப்பிரியா ஆகியோர் காயம் அடைந்தனர். அங்கிருந்தவர்கள் மூவரையும் மீட்டு, ஆத்தூர் அரசு மருத் துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் அஸ்வந்த் பரிதாபமாக உயிரிழந்தான்.சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த டிரைவரை போலீஸார் தேடி வருகிறார்கள்.