விபத்தில் மூளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவனின் உடல் உறுப்புகள் தானம்
மாணவனின் உடல் முழு மரியாதையுடன் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது;
Update: 2023-12-18 02:22 GMT
உடல் உறுப்புகள் தானம்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகில் உள்ள சித்தாளந்தூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனியப்பன்.இவரது மகன் சுகிசிவம் செங்குந்தர் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தநிலையில் , கல்லூரி முடிthது வீடு திரும்ப பஸ் நிறுத்தத்தில் நிற்கும் போது எதிர்பாரவிதமாக சாலையில் சென்ற இருசக்கர வாகனம் மோதி படுகாயம் அடைந்தார். உடனடியாக இவர் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் சுகிசிவம் மூளைச்சாவு அடைந்தது தெரியவந்தது. அதன் பின் அவரது உறவினர்கள் ஆலோசனை செய்து மனமுவந்து உறுப்பு தானம் செய்ய முன்வந்ததனர். இதனையடுத்து அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அங்கு அவரது மூளைச்சாவு உறுதி செய்யப்பட்டதால் தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி திரு.சுகிசிவத்தின் உறுப்பு தான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவரது இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள், தோல், எலும்பு மற்றும் கண்கள் தானமாக பெறப்பட்டு கோவை மற்றும் சென்னை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சிறு வயதுடைய மகனை இழந்தாலும் உறுப்பு தானம் வழங்க முன் வந்த சுகி சிவத்தின் குடும்பத்தாருக்கு கல்லூரி முதல்வர் நன்றிகளை தெரிவித்ததுடன் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்தார்கள். பின்னர் சுகிசிவத்தின் உடலுக்கு முழு மரியாதை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.