பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கிளை துவக்கம்

கீழ்வேளூரில் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் கிளை துவங்கப்பட்டு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.;

Update: 2024-01-25 02:49 GMT

துவக்க விழா  

நாகை மாவட்டம் கீழ்வேளூரில் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் கிளை  தொடக்க விழா . நடைபெற்றது. தொடக்க விழாவிற்கு    பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின்  மாநில பொதுச் செயலாளர்   பேட்ரிக் ரெய்மண்ட்  தலைமை தாங்கினார் கூட்டமைப்பின் துணைப் பொதுச் செயலாளர் ஜான் கென்னடி, மாநில செயற்குழு உறுப்பினர்  ரமேஷ் குமார், திருச்சி மாவட்ட தலைவர்  கணேசன், செயலாளர் ராஜ்மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கீழ்வேளூர் ஒன்றிய தலைவராக  தலைவராக சதீஷ், செயலாளராக நரேஷ்குமார், பொருளாளராக பாலாஜி ஆகியோரை ஒரு மனதாத தேர்வு செய்வது என்றும், மாநில முன்னுரிமையை வலியுறுத்தும் அரசாணை 243 ஐ ஆதரிப்பது, அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களை சேர்ப்பது, உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Tags:    

Similar News