கோயில் பூட்டை உடைத்து திருட்டு!

ஆவிணிப்பட்டி ஆஞ்சனேயர் கோவிலில் திருட்டு. போலீசார் விசாரணை

Update: 2024-02-03 07:35 GMT

கோயில் பூட்டை உடைத்து திருட்டு

திருமயம்: சிவகங்கை மாவட்டம் ஆவிணிப்பட்டியில் ஆஞ்சனேயர் கோயில் உள்ளது. சம்பவத்தன்று இரவு பூஜை முடித்துவிட்டு பூஜகர் பத்மநாபன் வீட்டுக்கு சென்றார். மறுநாள் காலை வந்து பார்த் தபோது கோயில் கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு வெள்ளி கண்மலர்கள், ருத்ராட்ச மாலை, ஐம்பொன் ருத்ராட்ச, பித்தளை சரம் விளக்குகள், காமாட்சி விளக்குகள், உண்டியல் பணம், வெள்ளி ஜடாரி ஆகியவை திருட்டுப்போயிருந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.20 ஆயிரமாகும். திருட்டு குறித்து பத்மநாபன் அளித்த புகாரின்பேரில் கீழச் சீவல்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News