துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் காலை உணவுத் திட்டம் - தலைவர் திடீர் ஆய்வு

Update: 2023-11-10 03:00 GMT

ஆய்வு 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது அதில் ஒரு சில தொடக்கப் பள்ளிகளில் துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தமயந்தி ஏழுமலை திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளிக்கு வரும் குழந்தைகள் அனைவரும் பசியுடன் வருகிறார்கள் அதனால் அவர்களுக்கு காலை உணவு வழங்க வேண்டும் அதற்காக தொடக்கப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து அதன் மூலம் மாணவர்களின் பசியை போக்கி பின்னர் அவர்கள் நல்ல முறையில் படிப்பதற்கு, பல திட்டங்கள் மூலம் மாணவர்கள் நல்ல முறையில் செழிப்பாக படிப்பதற்கு உதவி வருகிறார். அதில் இல்லம் தேடி கல்வி என்னும் எழுத்தும் கற்றல் கற்பித்தல் போன்ற திட்டங்களில் மாணவர்கள் நல்ல முறையில் படிப்பதற்கு பல நல்ல திட்டங்கள் செய்து வருகிறார் அதன் மூலம் மாணவர்கள் நீங்கள் சிறப்பான முறையில் படித்து  அனைவரும் சாதிக்க வேண்டும் மேலும் மாணவர்களுக்கு வழங்கும் உணவைத் தரமாகவும் சுவையாகவும் வழங்க வேண்டும் அதுவும் குறிப்பாக நேரத்துடன் மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என்றார்.
Tags:    

Similar News