மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நடைபயண பேரணி

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு திருப்பூரில் கல்லூரி மாணவியர்கள் பங்கேற்ற மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நடைப்பயண பேரணி நடைபெற்றது.

Update: 2024-03-08 13:03 GMT

விழிப்புணர்வு நிகழ்ச்சி 

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, திருப்பூரில் கல்லூரி மாணவியர் பங்கேற்ற, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நடைபயண பேரணி நடந்தது. உலக மகளிர் தினத்தை முன்னிட்டு,  திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரி மற்றும் தன்னார்வ அமைப்பினர் இணைந்து நடத்திய ‘பின்கத்தான்’ எனும் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு நடைப்பயண பேரணி இன்று நடந்தது. திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் துவங்கிய இப்பேரணியை, திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், மாநகர காவல் துணை ஆணையர் வனிதா, மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர், கல்லூரி முதல்வர் வசந்தி ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

மாநகரின் முக்கிய பகுதிகள் வழியாக வந்த இந்த நடைபயண பேரணியானது, திருப்பூர் தெற்கு ரோட்டரி சங்க வளாகத்தில் நிறைவு பெற்றது. இப்பேரணியில் 350க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவியர் பங்கேற்றனர். முன்னதாக, மகளிர் தினத்தை முன்னிட்டு, மாநகராட்சி பெண் தூய்மை பணியாளர்களுக்கு மேயர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

Tags:    

Similar News