பட்டாவில் பெயர், உட்பிரிவு மாற்றம் செய்ய ரூ.5000 லஞ்சம்

பட்டாவில் பெயர், உட்பிரிவு மாற்றம் செய்ய ரூ.5000 லஞ்சம் வாங்கிய சேத்பட்டு சர்வேயர் தீனதயாளன் கைது செய்யப்பட்டார்.

Update: 2024-02-23 01:37 GMT

பட்டாவில் பெயர், உட்பிரிவு மாற்றம் செய்ய ரூ.5000 லஞ்சம் வாங்கிய சேத்பட்டு சர்வேயர் தீனதயாளன் கைது செய்யப்பட்டார்.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் சர்வேயராக பணியாற்றி வருபவர் தீனதயாளன். இவர் பட்டா பெயர் மாற்றம் செய்து உட்பிரிவு செய்ய ரூ.5000 லஞ்சம் வாங்கிய போது மறைந்திருந்த லஞ்ச ஓழிப்பு துறையினர் கையும் களவுமாக தீனதயாளன் சர்வேயரை பிடித்து வழக்கு பதிவு செய்து லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News