சிட்டாவில் பெயர் சேர்க்க லஞ்சம்; பெண் கிராம நிர்வாக அலுவலர் கைது !
ஊட்டி அருகே சிட்டாவில் பெயர் சேர்ப்பதற்க்காக, லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார்.;
Update: 2024-04-05 15:49 GMT
ஊட்டி அருகே சிட்டாவில் பெயர் சேர்ப்பதற்க்காக, லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது செய்யப்பட்டார்.
ஊட்டி தேவாங்கர் திருமண மண்டபம் அருகில் உள்ள வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடம் அலுவலகம் முன்பு, அரசு கலைக் கல்லூரி சாலையில் இன்று சுமார் 13.40 மணியளவில் தும்மனட்டி கிராம நிர்வாக அலுவலர் கற்பகம், கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஜெய்கணேஷ் என்பவரிடம் சிட்டா வில் பெயர் சேர்க்க ரூ.6 ஆயிரம் பணம் பெரும் பொழுது லஞ்ச ஒழிப்புத்துறை ஆய்வாளர் கீதா லட்சுமி தலைமையிலான போலீஸார் கிராம நிர்வாக அலுவலர் கற்பகத்தையும் அவரது வாகன ஓட்டுனர் சதீஸ் என்பவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.