கூடுதல் உயரத்தில் பாலம் - வாகன ஓட்டிகள் அவதி

கொப்பனாபட்டியில் சாலையின் குறுக்கே 2 அடி கூடுதல் உயரத்தில் அமைக்கப்பட சாக்கடை பாலத்தால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

Update: 2024-01-24 06:35 GMT
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கொப்பனாபட்டி ஊராட்சி கொன்னையூர் பள்ளிவாசல் பகுதியில் சாக்கடை செல்ல கால்வாய் சமீபத்தில் 1 லட்சத்து 86 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிப்பிக்கப்பட்டது.அந்த சாக்கடை செல்லும் பாலம் முன்பு இருந்ததை விட 2 அடி கூடுதல் உயரமாக போடப்பட்டதால் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது‌.மேலும் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கீழே விழுந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.மேலும் மழை காலங்களில் சாலையில் மழைநீர் தங்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.எனவே பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வண்ணம் புதிதாக போடப்பட்ட பாலத்தினை சரிசெய்து தரவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News